புதுடெல்லி:

எழுத்தாளர் எம்எம்.கல்புர்கி கொலை வழக்கையும் கர்நாடகா சிறப்பு புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


கவுரி லங்கேஷ்கர் கொலை வழக்கை கர்நாடக சிறப்பு புலனாய்ப் பிரிவு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கல்புர்கியின் மனைவி உமா தேவி தாக்கல் செய்த மனுவில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் கவுரி லங்கேஷ்கர் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேபோல், என் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் நீதிமன்ற மேற்பார்வையில் நடந்துவரும் சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்,எம்எம்.கல்புர்கி கொலை வழக்கோடு சேர்த்து மகாராஷ்ட்ராவில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் வழக்கையும் கர்நாடக சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு மாற்றலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மகாராஷ்டிர தரப்பு வழக்கறிஞர் எழுந்து, இந்த இரு கொலை வழக்கு விசாரணையை மகாராஷ்ட்ரா சிறப்புப் புலாய்வுப் பிரிவு ஏறக்குறைய முடித்துவிட்டதால், கர்நாடகாவுக்கு வழக்கை மாற்ற வேண்டாம் என்றார்.

பின்னர் கல்புர்கி கொலை வழக்கை மட்டும் கர்நாடகா சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், மகாராஷ்ட்ர பத்திரிகையாளர்கள் கொலை வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.