சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் நதிகளிலே நீராடும் சூரியன்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கெளதம் மேனன் இயக்கவுள்ளார்.

இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் மறுபடியும் திரைத்துறை சம்பந்தமான பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.