எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

Must read


சென்னை:

ழுத்தாளர் அசோகமித்ரன்(வயது 85) உடல்நிலை குறைவால் காலமானார்.

‘அப்பாவின்சிநேகிதன்’ சிறுகதை தொகுப்புக்கு 1996ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

200 சிறுகதைகள், 15 கட்டுரை நூல்கள் உள்ளிட்டவை இவரது படைப்புகளாகும்.

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை  மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

1931ம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள செகந்திரபாத் மாவட்டத்தில் பிறந்தவர் அசோகமித்ரன்.  செப்டம்பர் 22ம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன்.

செகந்திராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார்.

எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக சில காலம் பணிபுரிந்து வந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார்.

கணையாழி என்ற  இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

1954ம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். சுமார்  200 சிறுகதைகள், 15 கட்டுரை நூல்கள் உள்ளிட்டவை இவரது படைப்புகளாகும்.

கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

இவருடைய `அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

More articles

Latest article