அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், உலகில் அதிக சோம்பேறிகள் எந்த நாட்டவர் என்று ஆய்வு ஒன்றை நடத்தியது. சுமார் 46 நாடுகளில், 7 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வில், நியூஸிலாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளே மிகவும் சோம்பேறியான நாடுகள் என்று தெரியவந்திருக்கிறது. இந்த நாடுகளில், மக்கள் ஒரு நாளைக்கு 3,513 அடிகளே நடக்கிறார்களாம்.
உலகில் சுறுசுறுப்பான நாடுகளில், சீனா மற்றும் ஹாங்காங் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்த நாட்டு மக்கள், சராசரியாக ஒரு நாளுக்கு 6,880 அடிகள் நடக்கிறார்களாம்.
சரி இந்த பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றிருக்கிறது?
இந்தியா 39-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4,297 அடிகள் நடக்கிறார்கள். அதோடு, இந்தியப் பெண்கள், ஆண்களைவிட மிகவும் குறைவான அடிகளே நடக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியர்களில் பெரும்பாலோர், வாகனங்களைச் சார்ந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.