வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,739 உயர்ந்து 21,82,025 ஆகி இதுவரை 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,739 பேர் அதிகரித்து மொத்தம்21,82,025 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6996 அதிகரித்து மொத்தம் 1,45,513 பேர் உயிர் இழந்துள்ளனர். 5,47,099 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 56,602 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நேற்றும் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,567 பேர் அதிகரித்து மொத்தம் 6,77,570 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2174 அதிகரித்து மொத்தம் 34,617 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 57,508 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 13,369 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4289 பேர் அதிகரித்து மொத்தம் 1,84,948 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 503 அதிகரித்து மொத்தம் 19,315 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 74,797 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7371 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3786 பேர் அதிகரித்து மொத்தம் 168,941 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 525 அதிகரித்து மொத்தம் 22,170 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 40,164 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2936 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரான்சில் நேற்று 753 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 17,920 ஆகி உள்ளது. இங்கு நேற்று 17,164 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,65,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1060 பேர் அதிகரித்து மொத்தம் 13,430 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 28 அதிகரித்து மொத்தம் 448 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1768 பேர் குணம் அடைந்துள்ளனர்.