வாஷிங்டன்

கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 30851 ஆகி உள்ளது.

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் மிக வேகமாகப் பரவி வருகிறது.  இன்றைய அதிகாலை கணக்கின்படி உலகெங்கும் 6,62,967 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   அதில் 30,851 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,72,804 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா  வைரஸின் ஊற்றுக் கண்ணான சீனாவில் மொத்தம் 81,439 பேர் பாதிக்கப்பட்டு 3,300 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   நேற்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.    ஆனால் அமெரிக்கா, இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

நேற்று வரை அமெரிக்காவில் 1,23,428 பேர் பாதிக்கப்பட்டு2,211 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று புதியதாக 19,302 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.   நேற்று 515 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இத்தாலியில் 10,023 பேர் மரணம் அடைந்து மரணம் அடைந்தோர் எண்ணிக்கை இங்கு அதிகமாக உள்ளது. நேற்று 5,974 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று 889 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் மொத்த நோயாளிகள் 73,235 பேராகவும் அதில் மரணம் அடைந்தோர் 5,982 ஆகவும் உள்ளனர்.  நேற்று மட்டும் இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 7,516 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.   நேற்று 844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இவற்றுக்கு அடுத்தபடியாக ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

இந்தியாவில் இதுவரை 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 24 ஆகி உள்ளது.  நேற்று புதிய நோயாளிகள் 100 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.  நேற்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.