இன்று பெண்களுக்கான உலகக்கோப்பை டி20இறுதிப் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகளின் பெண்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றனர்.
அதேபோன்று, ஆண்கள் அணியும் சாதிக்குமா என எதிர்பார்க்கப்பட்டது.
west indies 1
 
இங்கிலாந்துக்கு எதிராக , முதலில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி,  இரண்டு ஒவரில், இரண்டு விக்கெட்டுகளை விரைவாகக் கைப்பற்றி உள்ளது.  அடுத்தடுத்து விக்கெட்டுகளைக்  வீழ்த்தி சிறப்பாக விளையாடி வந்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அதற்குப்பின் விளையாடிய  மேற்கு இந்தியத் தீவுகள் அணி சிறப்பாக விளையாடி இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
சாமுவேல்ஸ் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 19 ரன் கள் தேவைப் பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்துகளைத்  தொடர்ந்து நான்கு சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் கார்லஸ் பிரத்வைட். அவர் 10 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். கார்லஸ் பிரத்வைட் பந்துவீச்சிலும் மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்தின் வில்லி, ரூட் மற்றும் ரஷித் முறையே 3,2 மற்றும் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி 19-வயதிற்குட்பட்டோர், மகளிர் மற்றும் ஆண்கள் டி-20 உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பத்திரிக்கை.காமின் வாழ்த்துக்கள்.