பிரக்யராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது.  இன்றும் 25 நாட்கள் உள்ளதால், பக்தர்கள் நீராடல் 75 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிப்ரவரி 3ந்தேதி(இன்று) வசந்த பஞ்சமி என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக யோகி அரசு தெரிவித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் (ஜனவரி 2025)  13ஆம் தேதி தொடங்கியது. சுமார் 45 நாட்கள் நடைபெறும் இந்த  மகா கும்பமேளா வரும் பிப்ரவரி  26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கும்பமேளாவையொட்டி,   கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இதற்காக உலகம் முழுவதும் உள்ள இந்துமக்கள் மட்டுமின்றி பல சமூக மக்களும் உ.பி. மாநிலம் வந்து திரிவேணி சங்கமத்தில் நீராடி செல்கின்றனர். ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தினரின் குடும்பத்தினர் உள்பட அனைத்து தரப்பினரும் கும்பமேளாவில் கலந்துகொள்வதுடன், திரிவேணி சங்கமத்தில் மூழ்கி தங்களது பிறவிக் கடன்களை போக்கி வருகின்றனர்.

கடந்த கும்பமேளாவில் சுமார் 25 கோடி பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு சுமார் 35 கோடி முதல் 50 கோடி பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 20ந்தேதி (பிப்ரவரி1ந்தி வரை) சுமார் சுமார் 34 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்பமேளா முடிய 26ந்தேதி வரை  இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில்,  திரிவேணி சங்கமத்தில் நீராடுபவர்கள் எண்ணிக்கை 50 கோடிகளை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாபெரும் உலக சாதனையாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதாலும், இன்று வசந்த பஞ்சமி என்பதால், பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், ஏற்கனவே நடைபெற்றபோது போன்ற கூட்ட நெரிசல் மற்றும் இறப்பு போன்ற எந்தவொரு நிகழ்வுகளும் ஏற்படாதவாறு, மேலும் பல வசதிகளுடன்,  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் யோகி உத்தரவின் பேரில் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.