
சென்னை :
தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2019 ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இது 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆகும்.
இந்த மாநாட்டிற்காக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின் அடுத்த கட்டமாக இன்று, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
[youtube-feed feed=1]