புதுடெல்லி: உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை யாஷஸ்வினி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் யாஷஸ்வினி, மனு பாகர் மற்றும் ஸ்ரீ நிவேதா ஆகியோர் தகுதிபெற்றனர்.

இதனையடுத்து, இறுதிப்போட்டியில் யாஷஸ்வினி 238.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மனு பாகர் 236.7 புள்ளிகளுடன் வெற்றிப் பதக்கம் வென்றார். ஸ்ரீ நிவேதா 193.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

அதேபோன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் செளரப் செளத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.