நெதர்லாந்து: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் புகார் கொடுத்துள்ளது. இந்த புகாரின்மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேட்டோ படைகளுடன் உக்ரைன் இணையும் திட்டத்தால் ரஸ்யாவுக்கு ஆபத்து என கருதும் அந்நாடு, உக்ரைன் நேட்டோவுடன் இணையக்கூடாது என வலியுறுத்தி வந்தது. ஆனால், அதை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டதால், உக்ரைன்மீது ரஷ்யா பிப்ரவரி 24ந்தேதி போர் தொடுத்தது. இன்று 7வது நாட்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், தலைநகர் கீவ்–ஐ கைப்பற்ற ரஷ்ய படைகள் சூழ்ந்துள்ளன.
இதற்கிடையில், ரஷ்ய படையெடுப்புக்கு எதிராகவும், ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. உக்ரைன் தரப்பில் தொடரப்பட்டுள்ள மனுவில், ”ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வகையில் உக்ரைனில் இனப்படுகொலை செய்வதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த அவசர உத்தர பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதே நீதிமன்றம் அல்லது தேசம் கடந்த நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ. நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
உக்ரைனின் தொழில்நகரமான கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியது ரஷ்யா