புதுடெல்லி:
பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் கூறுகையில், அலுவலகங்களில் பாலியல் புகார்கள் தெரிவிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்த சட்டம் குறித்து ஊழியர்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.