ஊதிய உயர்வு மற்றும் தங்களுக்கான ஓய்வூதியத்தொகையை பிடித்து வைத்திருப்பதை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், “சம்பளம் போதவில்லை என்றால் வேலையைவிட்டுப் போகவேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பியது.
இது தொழிலாளர்களிடையே பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் திருநெல்வேலி அரசு போக்குவரத்து நிலையத்தில், சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள், தங்களது அறிவிப்பு பலகையில் எழுதி வைத்திருக்கும் ஒரு தகவல் அனைவரையும் ஈர்த்துள்ளது.
இதை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.