பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைப்பதற்கு ஏதுவாக, பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்ற தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் 4-வது ரயில் முனையமாக்க வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததால் பெரம்பூரில் நான்காவது ரயில்நிலையம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலை அடுத்து நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவிட்டுள்ளது.