சென்னை: தமிழக அரசுக்கு எதிராக  நவம்பர் 26 முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு  வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பணி விதிகளில் இளநிலை மற்றும் மூத்த வருவாய் ஆய்வாளர்களின் பெயர்களில் மாற்றங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் நவம்பர் 26 முதல் பணி புறக்கணிப்பு  போராட்டம் என அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அப்போது,  தமிழ்நாட்டில் வருவாய்த் துறையில் பணியாற்றும் 16 ஆயிரம் பேர் இன்று பணிக்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளதாகவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், மாநில அரசை கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை  நடத்த  உள்ளதாகவும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில்,  தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அதிருப்தியடைந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கம் நவம்பர் 26 முதல் பணிகளை புறக்கணிக்கவும், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளதாக அறிவித்துள்ளது.

தங்களது கோரிக்கை மற்றும் பணி விதிகளில் இளநிலை மற்றும் மூத்த வருவாய் ஆய்வாளர்களின் பெயர்களில் மாற்றங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோர்ரிக்கை நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ள வருவாய்த்துறை அதிகாரிகள்  சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சங்கரலிங்கம், மாநிலத் தலைவர் எம்.பி.முருகய்யன் ஆகியோர்  தங்களது “இந்த குறிப்பிட்ட கோரிக்கை அரசாங்கத்திற்கு எந்த நிதிச் சுமையும் சுமத்தவில்லை, இருப்பினும் அது நிறைவேற்றப்படா மல் உள்ளது” என்றும், கடந்த 2021 பிப்ரவரி   முதல் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்புமாறு அவர்கள் கோரி வருவதையும் சங்கம் எடுத்துரைத்தது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. மேலும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவிகளுக்கான பதவி உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

நகர்ப்புற நில வரி வசூல் போன்ற பொறுப்புகளை மாற்றுவதன் மூலம் முக்கிய பதவிகளை அகற்ற நிதித் துறை முயற்சிப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்த போதிலும், சில அதிகாரிகள் அவற்றை செயல்படுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது, இது ஊழியர்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினைகளின்படி, நவம்பர் 26 முதல் போராட்டம் நடத்தவருவாய்த்துறை அதிகாரிகள்  சங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.