டெல்லி:
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் சாதனைப்படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புராஸ்கர் 2019 விருது வழங்கி கவுரவித்தார். இந்தவிருதுக்கு கேரளாவைச் சார்ந்த பாகீரதி அம்மாள், கார்த்தியாயினி அம்மாள் தேர்வு செய்யப் பட்டிருந்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் விருது வழங்கினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல துறைகளிலும் சிறந்து பங்காற்றிய பெண்களுக்கும், . பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த பெண்களுக்கு, தன்னார்வ அமைப்புகளுக்கும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான, நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பெண்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டும் வகையில் நேற்று விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாரி சக்தி புரஸ்கார் விருதை அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.
அதன்படி, இந்திய விமானப்படையின் முதல் போர் விமான விமானிகளான மோகனா ஜிதார்வால், அவனி சதுர்வேதி மற்றும் பாவனா காந்த் ஆகியோருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 103 வயது பாட்டி, மான்கவுருக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், கேரளாவில் அண்மையில் 4ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய 105 வயது பாகீரதி அம்மாள் பாட்டிக்கும், 2018ல் அதேமாநிலத்தில் முதியோருக்கான எழுத்தறிவு இயக்கமான ‘அக்ஷரலக்ஷம்’ தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய கார்த்தியானி அம்மா(98) பாட்டிக்கும் விருது வழங்கப்பட்டது.
கிராமப்புற பெண்களிடையே காளான் வளர்ப்பு தொழிலைப் பிரபலப்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திய பிகாரைச் சேர்ந்த பினா தேவி, திறந்தவெளி இடத்தில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கான்பூரைச் சேர்ந்த கலாவதி தேவி என 15 பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த பிப்ரவரி 23ம் தேதி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகீரதியின் படிப்பு ஆர்வத்தை பாராட்டி, அனைவருக் கும் முன்மாதிரியான அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
105 வயது பாகீரதி அம்மாள் என்ற மூதாட்டி கேரளாவைச் சேர்ந்தவர், 10 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். படிப்பின் மீதான ஆர்வத்தில் தற்போது படிப்பை தொடங்கிய அவர், 4ம் வகுப்பு தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். இதன்மூலம் கேரள மாநில எழுத்தறிவு மிஷனின் வகுப்புகளில் அதிக வயதில் தேர்ச்சி பெற்றவர் என்னும் சிறப்பை பெற்றார்.
அதேபோல் கேரளாவை சேர்ந்த 96 வயது கார்த்தியானி அம்மாள் என்ற மூதாட்டி 2018ம் ஆண்டில் தேர்வெழுதிய போது நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தினார். இவர்களுக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விருதுபெற்ற பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.