டெல்லி: காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% ஆக அதிகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார். இதை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) வேணுகோபால் எம்.பி. தலைமையில், டெல்லி அக்பர் ரோட்டில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில்
பஞ்சாப் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெற்றது. மேலும், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாங் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக கார்கே தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டர்.

இதுதொடர்பாக, கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. லால் பகதூர் சாஸ்திரி, கோவிந்த் வல்லாப் பண்ட், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டு ராவ், அமைச்சர் தரம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாவட்ட தலைவர் பதவியை வகித்தவர்கள். நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன். கட்சியின் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதம் என்ற வகையில் நாம் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து, முக்கிய கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
பீகாரில், ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி வாக்காளர் அதிகாரம் என்பதன் மூலம் முழு ஆதரவை மக்களிடம் இருந்து பெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில், நம்முடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சொல்ல வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Congress president, aiic president, Kharge, காங்கிரஸ்,. கார்கே, Congress General Secretary kcvenugopal