ராஜகோட்: குஜராத்தில் தங்கள் பகுதியில் தண்ணீர் வராததைக் கண்டித்து, 200 பெண்கள், ராஜ்கோட் பகுதியில் பானை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக தங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்பதால், அதுகுறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, 200 பெண்கள் ஒன்றுதிரண்டு வந்து, ராஜ்கோட் மாநகராட்சி அலுவலகத்தின் 12வது வார்டு அலுவலகத்தின் முன்பாக, தங்களின் பானைகளை உடைத்தனர்.
விஜய் வாங்க் மற்றும் சஞ்சய் அஜுடியா என்ற இரண்டு காங்கிரஸ் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு, ‘எங்களுக்கு தண்ணீர் வேண்டும்’ என்ற முழக்கத்துடன் திரண்டு வந்த பெண்கள், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பின்னர், அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தங்களின் போரட்டத்தைக் கைவிட்டனர்.
– மதுரை மாயாண்டி