டெல்லி: இளம்பெண் மருத்துவர் கொடூரமான முறையில் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒவ்வொரு 2மணி நேரமும் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை அனுப்ப மம்தா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மமதையுடன் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் அம்மாநிலத்தில் கொலை, பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக யாரும் கேள்வி கேட்டால் அவர்கள் தாகக்ப்படும் வாடிக்கையாக உள்ளது. அதிகார மமதையும் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், உச்சபட்ச நிகழ்ச்சியாக, கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை குறித்த முறைகேட்டை அம்பலப்படுத்தி 31வயது இளம் பெண் பயிற்சி மருத்துவர் ஒரு கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அம்மாநிலமே தகதகவென எரிந்துகொண்டிருக்கிறது. மேலும் நாடு முழுவதும் மருத்துவர்கள் மம்தா அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில், . மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும், ஆஸ்பத்திரிகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
இந்த போராட்டம் காரணமாக, அனைத்து மாநிலங்களின் போலீஸ் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பி வைத்தது. அதில், டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், கொல்கத்தா உள்பட பல பகுதிகளில் இன்றும் போராட்டம் தொடர்ந்து வருவதால், போராட்டம் நடைபெறும் மாநிலங்களில் 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை சட்டம்-ஒழுங்கு நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.