கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பூமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, மருத்துவ பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து உடல்நிலை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பன்றிக்காய்ச்சல் காரணமாக சாந்தி உயிரிழந்தார். சாந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, பன்றிக்காய்ச்சல் பரவுவது தொடர்பான பதற்றமான சூழல் மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதான் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.