பெல்ஜியம்
சைக்கிள் போட்டியில் முதலாவதாக வந்துக் கொண்டிருந்த பெண் ஆண்கள் போட்டி வளையத்துக்குள் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்
பெல்ஜியம் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் தனித்தனியே நடந்தது. ஆண்கள் போட்டி தொடங்கி 10 நிமிடம் கழித்து பெண்களுக்கான போட்டிகள் தொடங்கப்பட்டன. போட்டிக்கான பாதை ஒரே பாதை என்பதால் இரு போட்டியாளர்களுக்கும் இடையில் குழப்பம் வராமல் இருக்க இவ்வாறு தொடங்கப்பட்டது.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சைக்கிள் வீராங்கனை நிகோல் ஹான்செல்ன்மன் போட்டி ஆரம்பத்தில் இருந்தே கடுமையான வேகத்தில் சைக்கிளை ஓட்டிச் சென்றார். அவருடன் சென்றவர்கள் அனைவரையும் தாண்டி வெகு வேகமாக சைக்கிளை செலுத்திய நிகோல் முதல் இடத்தில் இருந்தார்.
அவருடைய அபரிமிதமான வேகம் காரணமாக அவர் தங்களுக்கு 10 நிமிடங்கள் முன்பு போட்டியை ஆரம்பித்த ஆண்கள் குழு போட்டி வளையத்துக்குள் சென்று விட்டார். அப்போதும் நிறுத்தாமல் சைக்கிளை நிகோல் செலுத்தினார். ஆயினும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி தனித்தனியே நடப்பதால் போட்டி அமைப்பாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
பெண்கள் போட்டியினர் அந்த இடத்துக்கு வந்ததும் மீண்டும் நிகோல் போட்டியில் அனுமதிக்கப்பட்டார். முதலில் கனவேகமாக சைக்கிளை செலுத்திய நிகோல் போட்டி இறுதியில் 74 ஆம் இடத்தில் வந்தார். இது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நிகோல், “நான் நல்ல ஒரு உற்சாகத்துடன் சைக்கிளை ஓட்டி வந்த போது இடையில் நிறுத்தப்பட்டதால் எனது ஆர்வம் குறைந்தது. இது எனக்கு சற்றே வருத்தத்தை அளித்தது. திரும்பவும் அந்த பழைய ஆர்வத்துடன் சைக்கிளை என்னால் ஓட்ட முடியவில்லை.
நான் ஆண்கள் சைக்கிள் பந்தய ஆம்புலன்சுகளை நெருங்கிய போது தடுத்து நிறுத்தப்பட்டேன். வேகமாக சைக்கிள் ஓட்டும் போது சுமார் 7 அல்லது 8 நிமிடம் நிறுத்தப்பட்டு மீண்டும் அனுப்பப் பட்டதால் எனக்குள் இருந்த அந்த உற்சாகமும் ஆர்வமும் மீண்டும் என்னால் கொண்டு வர முடியவில்லை. ” எனா தெரிவித்துள்ளர்
நிகோல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ”ஒரு வேளை ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்படுவது இல்லை என்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறதா அல்லது ஆண்களை பெண்கள் வெற்றி பெறுவதை போட்டியாளர்களால் சகித்த்க் கொள்ள முடியவில்லை என்பது தெரியவந்துள்ளதா என்பது எனக்கு புரியவில்லை.” என பதிந்துள்ளார்.