தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
பெண்களை அவதூறாக பேசுவதால் அவர்கள் பொதுவாழ்விற்கு வருவதற்கே அச்சமான சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தங்கள் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழிசையை தரக்குறைவாக விமர்சித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, திருச்சியைச் சேர்ந்த அந்த பெண்மணியின் பெயர் சூர்யா தேவி.