
பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை, கணவர் உதவியுடன் மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டைச் சேர்ந்த 26 வயது பெண்மணி, மாலா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனது கணவர் மற்றும் மாமனாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை அன்று கணவர் விவசாய வேலை செய்ய சென்றுவிட்டார். அன்று பகலில், வீட்டில் தனியாக இருந்தார் மாலாவை, அவரது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
பிறகு, “என்னை மன்னித்துவிடு. தவறாக நடந்துவிட்டேன். இதுபற்றி யாரிடம் சொல்ல வேண்டாம். இனி இது போல் நடக்க மாட்டேன்” என்று கெஞ்சினார்
இதையடுத்து அவரை மன்னித்த மாலா, இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில் அன்று இரவும் மருமகளை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
அப்போது மாலாவின் கணவர் வந்துவிட்டார். அவரிடம் கண்ணீர்விட்டு கதறிய மாலா, விசயத்தைச் சொன்னார். பிறகு அங்கிருந்த கட்டையால் அவரைத் மாமனாரை தாக்கினார். இதைக் கணவரும் ஊக்குவித்தார். மாலா, மாமனாரை கட்டையால் அடித்தே கொன்றார்.
பிறகு கணவனும் மனைவியும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்