புனே: மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநரின் உதவியாளரால் 2  முறை பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து சொகுசு பேருந்து ஒன்றில்  சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்துக்குள் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓட்டுநரின் உதவியாளர் தம்மை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புனே போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் வாஷிம் மாவட்டத்தில் நடந்த நிலையில், புனே காவல்துறை புகாரை சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறைக்கு அனுப்பி உள்ளது.

பாதிக்கப்பட்டவரின் அறிக்கையின் அடிப்படையில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.