ண்டிகர்

ண்டிகர் விமான நிலையத்தில் பிரபல நடிகை மற்றும் பாஜக எம் பி கங்கணா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த ஒரு பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

கடந்த 4 ஆம் தேதி நாடெங்கும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார். எனவே நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்ற போது பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு கங்கனா ரனாவத் விஸ்தாரா விமானம் மூலம் மதியம் 3 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கங்கனா தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து,

“ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் இருந்து ஏராளமான அழைப்புகள் எனக்கு வருகின்றன. யாரும் பயப்பட வேண்டாம். நான் பாதுகாப்பாக, நன்றாக இருக்கிறேன். எனது பாதுகாப்புச் சோதனையை முடித்து நான் திரும்பியபோது ஒரு CISF அதிகாரி என்னை அடித்து திட்டினார். நான் அவரிடம் இதுபற்றி கேட்கும்போது விவசாயிகளை ஆதரிப்பதாக கூறினார். நான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன். ஆனால் பஞ்சாப்பில் வளர்ந்து வரும் தீவிரவாதம் மற்றும் வன்முறையை எப்படி கையாள்வீர்கள்? நன்றி”

எனப் பதிந்துள்ளார்.