தராபாத்

பெண் ஐ ஆர் எஸ் அதிகாரி ஒருவர் ஆணாக மாறியதாக அறிவித்துள்ளார்.

அனுசூயா என்பவர் ஐதராபாத்தில் உள்ள மத்திய சுங்க கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

சுமார் 35 வயதான இந்த பெண் அதிகாரி, அரசாங்க ஆவணங்களில் தனது பெயரையும், பாலினத்தையும் ஆணாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தார். இனி’எம்.அனுகதிர் சூர்யா’ என்று தனது பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

, அவரது வேண்டுகோளை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டு எம்.அனுசுயா, இனிமேல் அரசாங்க ஆவணங்களில் ‘எம்.அனுகதிர் சூர்யா’ என்று குறிப்பிடப்படுவார் என்றும், ஆணாக கருதப்படுவார் என்றும் கூறியுள்ளது.

இது இந்திய சிவில் சர்வீசஸ் வரலாற்றில் இப்படி நடப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.