லக்னோ
உத்திரப்பிரதேசத்டை சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் முத்தலாக் கூறிய கணவனால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷராவதி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் 22 வயதான சயேதா என்னும் பெண் மும்பையில் வசிக்கும் நஃபீஸ் இளைஞரை மணம் முடித்துள்ளார். அவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சயேதாவின் கணவர் அவருக்கு தொலைபேசி மூலம் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
சயேதா உள்ளூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சயேதாவை கணவருடன் வசிக்குமாறு அனுப்பி உள்ளனர். அத்துடன் கடந்த 15 ஆம் தேதி அன்று ஊருக்குத் திரும்பிய நஃபீஸுக்கு அறிவுரை அளித்து மனைவியுடன் வாழச் சொல்லி உள்ளனர். ஆனால் நஃபீஸ் வீட்டை விட்டு சயேதாவை துரத்தி உள்ளார்.
அவர் அங்கிருந்து செல்ல மறுத்ததால் நஃபீஸ், அவர் தாய் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தி உள்ளனர். இதை சயேதாவின் மகள் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். தகவல் அறிந்து காவல்துறையினர் வருவதற்குள் சயேதா மரணம் அடைந்துள்ளார்.
சயேதாவின் மகள் தன் தாயாரைத் தனது தந்தை பிடித்துக் கொண்டு இருக்கையில் அத்தைகள் மண் எண்ணெயை ஊற்றியதாகவும் பாட்டி தீக்குச்சியைக் கொளுத்தி எறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை.
[youtube-feed feed=1]