வாஷிங்டன்: அமெரிக்காவில், சொட்டு மருந்தை பயன்படுத்தி கணவனை கொன்ற மனைவிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்டீபன். அவரது மனைவியின் பெயர் லானா கிளாட்டன். வயது 53. தனது கணவர் கொடுமைப்படுத்தியதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து கண்ணுக்கு பயன்படுத்தும் சொட்டு மருந்தை குடிக்கும் தண்ணீரில் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கிறார். ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சொட்டு மருந்தை குடிதண்ணீரில் கலந்தால் வயிற்றுப்போக்கு மட்டுமே ஏற்படும் என்று நினைத்ததாகவும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், அவர் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவானது. விசாரணைக்கு பிறகு, 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. சொட்டு மருந்தின் மூலம் மனைவியே கணவரை கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.