டெல்லி: பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் பெண் முதல்வரான  மம்தாவின் ஒருதலைப்பட்சமான அகங்கார நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து பாராளுமன்றமேலவை  திரிணமூல் எம்.பி. ஜவஹர் சர்கார் தனது எம்.பி. பதவியை  ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கொல்கத்தா தனியார் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில்,  பெண் பயிற்சி மருத்து வர் பாலியல் கொடுமைக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில முதல்வரான மம்தாவின் அகங்காரமான போக்கு மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை கடுமையாக  விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி உள்ளார்.

மம்தாவின் அகங்கார போக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அவரது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை கண்டித்து, தனது எம்.பி.  பதவியை ராஜினாமா செய்வதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஜவகர் சிர்கார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த பாலியல் கொலை சம்பவத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். மாநில காவல்துறையும் தனியார் மருத்துவமனை மற்றும் குற்றவாளகிளை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளது. இதனால், மம்தா அரசுமீது நம்பிக்கையின்றி மாநிலம் முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.

இந்த நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜவகர் சிர்கார்,  தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அவரது கடிதத்தில்,  ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பாலியல் வன்கொடுமை, கொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இளம்பெண் மருத்துவர் கொல்லப்பட்ட உடனேயே, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பழைய பாணியில் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பினேன். நீங்கள் நேரடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. “மக்களின் தற்போதைய தன்னிச்சையான பொதுக் கோபம்”, “அரசாங்கமான சிலர் மற்றும் ஊழல்வாதிகளின் கட்டுப்பாடற்ற மேலாதிக்க மனப்பான்மைக்கு” எதிரானது என்று கூறி, இருப்பதுடன், “என்னுடைய எல்லா வருடங்களிலும், அரசாங்கத்திற்கு எதிரான இத்தகைய கவலை மற்றும் முழுமையான நம்பிக்கையின்மையை நான் கண்டதில்லை. மாநிலத்தை காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள்/

 இந்தச் சூழலில், எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். அரசியலில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

இவ்வாறு  கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற பெரும் கல்வித்துறை ஊழலின்போது,  முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் பிடிபட்டபோது, ஊழலுக்கு எதிராக முதல்வர் மம்தா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவகர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கிலும் பெண் முதல்வரான மம்தாவின் நடவடிக்கைக்கை மீது அதிருப்தி தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளார்.