அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் உள்ள விமான நிலைய கழிப்பறையில் தனது செல்ல நாயை மூழ்கடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் அகதா லாரன்ஸ் (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது வளர்ப்பு நாயை விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாததால், அந்தப் பெண் இந்தச் செயலைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது, குற்றம் சாட்டப்பட்ட பெண் அப்போது ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெக்சாஸுக்குப் பயணம் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பாதுகாப்பு அதிகாரிகள் தனது வளர்ப்பு நாயை விமானத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்க வில்லை என்றும் இதனால் அந்தப் பெண், நாயை விமான நிலைய காத்திருப்பு அறையின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.

இந்த வழக்கு ஆரம்பத்தில் சவாலாக இருந்த நிலையில் ஆதாரங்களை முறையாக மதிப்பாய்வு செய்து, அந்தப் பெண்ணைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.