காதலன் கண்முன்னே, இருபது வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவுக்கு கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள். உள் ளுர் காதலர்களும் இங்குள்ள கடற்கரைக்கு வருவது உண்டு.
குறிப்பாக தெற்கு கோவா பகுதியில் உள்ள கோல்வா கடற்கரை கடற்கரை பகுதியில் ஏராளமான காதலர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் 20 வயது இளம் பெண் ஒருவர், தனது காதலருடன் இங்கு நேற்றுமுன் தினம் இரவு வந்தார். அப்போது கடற்கரையில் கூட்டமே இல்லை. இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று அங்கு வந்த மூன்று இளைஞர்கள், இருவரையும் மிரட்டி நிர்வாணப்படுத்தினர். பிறகு அவர்களை புகைப்படம் எடுத்தனர். பிறகு காதலன் கண் முன்பே அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பிறகு தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவர் காதலரும் தெற்கு கோவா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது