மும்பை

டந்த இரு தினங்களில் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.,10.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பரேட் வரி விகிதங்களைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.   அவர் அந்த அறிவிப்பை வெளியிட்ட வெள்ளிக்கிழமையில் இருந்தே பங்குகளின் மதிப்பில் ஏறுமுகம் தென்பட்டது.

இந்த நிலை இரண்டு நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

வார முதல் நாளான இன்று தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 911 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன.   அது மேலும் உயர்ந்து மதியம் 1921.15 புள்ளிகள் ஆகி உள்ளன.  இவ்வாறு தொடர்ந்து  பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏற்றத்தால் மும்பை பங்குச் சந்தை அறிவிக்கப்பட்ட பங்குகளின் மதிப்பு ரூ10.53,495 கோடி அதிகரித்துள்ளது.

இந்த இரு தினங்களில் மட்டும் பங்குகளின் விலையில் மொத்தம் ரூ.1,49,05,247 கோடி உயர்ந்துள்ளது.    கடந்த வியாழன் அன்று சந்தை முடிவில் இந்த பங்குகளின் மதிப்பு ரூ. 1,38,54,439 கோடியாக இருந்து வந்தது.