டெல்லி: பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
[youtube-feed feed=1]
நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள் எம்எல்ஏக்கள் முதலமைச்சர்கள் கவர்னர்கள் ஆகியோரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.