ரியோ டி ஜெனிரோ:
லிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது எனது கனவு என்று இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறி உள்ளார்.
நேற்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ள பி.வி.சிந்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது எனது கனவே, அது நிறைவேறும் என நம்புவதாக தெரிவித்தார்.
கடந்த 15 நாட்களாக நடைபெற்று வரும் பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் 21ந்தேதியுடன் போட்டிகள் நிறைவடைகின்றன.
நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுராவை பிவி சிந்து  21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஓகுராவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு  முன்னேறினார். இதன் காரணமாக  இந்தியாவுக்கு பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
SINDU1
இதுகுறித்து, பிரேசிலை சேர்ந்த்  செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, “ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்கு – கனவு” என்று கூறியுள்ளார். மேலும் இறுதி போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுவேன் என்று சிந்து தெரிவித்துள்ளார்.