ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது விண்டீஸ் அணி.
இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்றது.
முதல் இருபோட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. இந்நிலையில், கோப்பையை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அந்த அணியில் தினேஷ் சந்திமால் 54 ரன்களும், அஷேன் பந்தாரா 44 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.
பின்னர், எளிய இலக்கை விரட்டிய விண்டீஸ் அணியில், யாரும் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றாலும், அந்த அணியில் 4 வீரர்கள் 20+ ரன்களை அடித்தனர். இறுதியில், 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது விண்டீஸ் அணி.
இதன்மூலம், இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வென்றது விண்டீஸ் அணி.