டாக்கா: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது விண்டீஸ் அணி.

முதல் இன்னிங்ஸில் விண்டீஸ் அணி 409 ரன்கள் அடிக்க, வங்கதேசமோ 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில், 113 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய விண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸை 117 ரன்களுக்கே இழந்தது. இதன்மூலம், வங்கதேச அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 2 நாட்கள் ஆட்டம் கையில் இருந்தாலும்கூட, வங்கதேசத்தால் பொறுமையாக ஆடி இலக்க‍ை எட்ட முடியவில்லை. துவக்க வீரர் தமிம் இக்பால் மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்தார்.

மெஹிதி ஹாசன் 31 ரன்கள் அடிக்க, மொமினுல் ஹேக் 26 ரன்களை அடிக்க, 61.3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது.

விண்டீஸ் தரப்பில், ரக்கீம் கார்ன்வால் 4 விக்கெட்டுகளையும், ஜோமல் வாரிகன் மற்றும் பிராத்வெய்ட் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.