ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, விண்டீஸ் அணி ‘டிரா’ செய்தது.
இலங்கை நிர்ணயித்த 375 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய விண்டீஸ் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிரா ஆனது.
அந்த அணியின் நிக்ருமா 113 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தார். மேயர்ஸ் 52 ரன்கள் அடித்து அவுட்டானார். ஜேஸன் ஹோல்டர் 18 ரன்கள் எடுத்து, நிக்ருமாவுடன் களத்தில் நின்றபோது ஆட்டம் டிரா ஆனது.
விண்டீஸ் அணி, மொத்தம் 100 ஓவர்கள் ஆடியது. விண்டீஸ் அணி, டிராவை நோக்கி ஆடுவதுபோல், மிகவும் நிதானமாக ஆடியது குறிப்பிடத்தக்கது.