டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 154 ரன்களை முன்னிலைப் ப‍ெற்றுள்ளது விண்டீஸ் அணி.

முதல் இன்னிங்ஸில் 409 ரன்களை விண்டீஸ் அணி எடுக்க, பதிலுக்கு 296 ரன்களையே தனது முதல் இன்னிங்ஸில் சேர்த்தது வங்கசேதம். இதன்மூலம், 113 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது விண்டீஸ்.

ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் அந்த அணி சற்று தடுமாறி வருகிறது. துவக்க வீரர் பிராத்வெய்ட் 6 ரன்களுக்கும், கேம்ப்பெல் 18 ரன்களுக்கும், மோஸ்லே 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது விண்டீஸ் அணி. முதல் இன்னிங்ஸ் போல, மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மென்கள் கலக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.