
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 460 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர், களமிறங்கிய விண்டீஸ் அணி 131 ரன்களுக்கே ஆல்அவுட் ஆகி பாலோ ஆன் பெற்றது. அந்த அணியின் பிளாக்வுட் மட்டுமே 69 ரன்களை அதிகபட்சமாக அடித்தார்.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய விண்டீஸ் அணி, அதிலும் மோசமாகவே ஆடியது. இதில், ஜான் கேம்ப்பெல் 68 ரன்களை எடுத்து அவுட்டானார்.
ப்ரூக்ஸ் 36 ரன்களையும், பிராத்வெய்ட் 24 ரன்களையும் எடுத்தனர். தற்போதைய நிலையில், ஜேசன் ஹோல்டர் 60 ரன்களுடனும், ஜோஷ்வா டி சில்வா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போதைய நிலையில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், கையில் 4 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், 85 ரன்கள் பின்தங்கியுள்ளது. நிலைத்து நின்று ஆடி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? அல்லது அந்த 86 ரன்களுக்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து சார்பில், டிம் செளதி மற்றும் கைல் ஜேமிசன் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்டுகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
இரண்டாவது இன்னிங்ஸில், பெளல்ட் 3 விக்கெட்டுகளையும், ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும், வேக்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
[youtube-feed feed=1]