வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 124 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் பின்தங்கியுள்ளது விண்டீஸ் அணி.

டாஸ் தோற்று, முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 460 ரன்களைக் குவித்தது.

அந்த அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 174 ரன்களையும், நீல் வேக்னர் 66 ரன்களையும், வில் யங் 43 ரன்களையும், பிஜே வாட்லிங் 30 ரன்களையும், மிட்செல் 42 ரன்களையும் அடித்தனர்.

விண்டீஸ் தரப்பில் கேப்ரியல் மற்றும் ஐசரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். செமார் ஹோல்டர் மற்றும் ரேஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், இரண்டாம் நாளில் களமிறங்கிய விண்டீஸ் அணி, கடந்த இன்னிங்ஸைப் போலவே, மிகவும் மோசமாக ஆடியது. கடந்தப் போட்டியைப் போலவே, தனி மனிதனாகப் போராடிய பிளாக்வுட், 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு அடுத்து, கேம்ப்பெல் மற்றும் ப்ரூக்ஸ் அடித்த தலா 14 ரன்கள்தான் அந்த அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன்கள்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், விண்டீஸ் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 124 மட்டுமே எடுத்துள்ளது. இந்தமுறையாவது அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளையும், டிம் செளதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

[youtube-feed feed=1]