
வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 1 இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்று, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது விண்டீஸ் அணி.
முதல் டெஸ்ட்டிலும் விண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியிருந்தது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது விண்டீஸ் அணி.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 460 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய விண்டீஸ் அணி, வெறும் 131 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
பின்னர், பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ஆனால், அதிலும் எதிர்பார்த்தபடி சோபிக்க முடியவில்லை. ஜான் கேம்ப்பெல் 68, ஜேசன் ஹோல்டர் 61 மற்றும் ஜோஷ்வா டா சில்வா 57 என்று மூன்று பேர் அரைசதம் அடிக்க, மற்றவர்கள் ஒத்துழைக்காத காரணத்தால், இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது அந்த அணி.
நியூசிலாந்து தரப்பில் பெளல்ட் மற்றும் வேக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டிம் செளதி மற்றும் ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
[youtube-feed feed=1]