டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

250 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே ஆம்ஆம்தி கட்சி முன்னிலை பெற்று வந்தது. இன்று மதியம் ஒருமணி நிலவரப்படி, ஆம்ஆத்மி கட்சி 108 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 84 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 5 வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஆம்ஆத்மி கட்சி மாநகராட்சியை கைப்பற்றுவது உறுதியாகி உள்ள நிலையில், ஆங்காங்கே ஆம்ஆம்மி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel