திருவனந்தபுரம்:

யுதங்களை எடுத்துச்செல்வதை சோதனைச் சாவடியில் தடுத்ததால் வில்சன் கொலை செய்யப்பட்டார் என்று பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட விபத்து காரணமாக நாகர்கோவில் ஆயுதப்படையிலிருந்து களியக்காவிளை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சுழற்சி முறையில் கேரள எல்லைப் பகுதியாக களியக்காவிலையில்  அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் பணியாற்றி வந்தவர் சிறப்பு எஸ்ஐ வில்சன். இவர் கடந்த   கடந்த 8-ம் தேதி பணியில் இருந்தபோது, அந்த வழியாக ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகளை தடுத்ததால், பயங்கரவாதிகளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் மற்றும், கேரளா மற்றும் கர்நாடக மாநில காவல்துறையினர் உதவியுடன் பயங்கரவாதிகளை பிடிக்க  முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் தெளபிக், அப்துல் சமீம் என்ற 2 பயங்கரவாதிகள் அங்குள்ள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  காவல் உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக  ஆயுதங்களை கடத்த  பயங்கரவாதிகள் முயற்சித்தபோது,  சோதனை சாவடியில் தடுத்ததால், அவர் கத்தியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும்,  குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளவர்கள், இதற்காக  17 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளனர்.

இந்த தகவல்  தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர்கள் கூறுவதுபோல, தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தமிழத்தில் தங்கி இருந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது எஸ்ஐ வில்சன் கொலையிலும், குடியரசுத் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ள பயங்கரவாதிகளில் , தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளதாக வந்துள்ள தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.