புதுச்சேரி:
மத்திய அரசுடன் இணைந்து செயல்படவே புதுச்சேரி மாநில அரசு விரும்புகிறது என முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர், தற்போது வெளியிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு பதில், ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றவர், கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது’ என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே புதுச்சேரி அரசின் விருப்பம் என்று நாராயணசாமி கூறியவர், மாநில அந்தஸ்து, 7 வது ஊதிய குழு நிதி உள்ளிட்ட கோரிக்கை கள் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று கூறியவர், புதுச்சேரி நிதி ஆதாரத்தை பெருக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.