நடிகர் கமல்ஹாசன் நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்-2. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வரும் ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று படத்தை வெளியிட நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே விஸ்வரூபம் என்ற படத்தை கடந்த 2013-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்து வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் பயங்கரவாதம் குறித்து அவர் விவரித்திருந்தார். அந்த படத்திற்கு இஸ்லாமியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து படத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டு வெளியாகி சாதனை படைத்தது.
அதையடுத்து விஸ்வரூபம்2 என்ற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில் விஸ்வரூபம் முதல்பாகத்தில் கமலுடன் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர்கபூர் உள்பட பலரும் இரண்டாம் பாகத்தில் தொடருகின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
விஸ்வரூபம்-2 படம் சென்சாருக்கும் சென்று வந்துவிட்டதை தொடர்ந்து, படத்தை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தில் வெளியிட கமல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.