போபால்
கொரோனா பரவலால் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாக்கப்படலாம் என ஊகம் கிளம்பி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து தொழிலகங்கள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள். திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வின் அடிப்படையில் தற்போது மூடப்பட்ட அலுவலகங்கள் உள்ளிட்டவை இயங்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையொட்டி மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என ஊகம் எழுந்தது.
இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது எனவும் அதற்கான வாய்ப்பே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.