சென்னை
வரிகளை வசூலிக்காத அதிகாரிகள் தங்களுக்குத் தாமதமாக ஊதியம் அளித்தால் ஒப்புக் கொள்வார்களா என உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கேட்டுள்ளார்.
பிரபல நடிகர்கள், பெரிய தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி, “பெரும் பணக்காரர்கள் பலர் வெளிநாட்டுச் சொகுசு வாகனங்களுக்கு நுழைவு வரியைச் செலுத்தாமல், வழக்கு தொடர்ந்துள்ளனர்,
உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டே இது குறித்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து விட்டபோதும், வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை தமிழக நிதி அமைச்சர் தனது வெள்ளை அறிக்கையில் அதிகாரிகள் ஒழுங்காக வரி வசூலிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வரியை வசூலிக்காமல் இழுத்தடித்து வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஏற்கனவே தாங்கள் உத்தரவிட்டோம்.
அதன்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது. சரிவர வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.