டில்லி:

ந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான  யுவராஜ் சிங் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

தற்போது ஐபிஎல் போட்டிகளில்,பஞ்சாப் அணி சார்பாக விளையாடி வரும் யுவராஜ் சிங் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து உள்ளார்.

கடந்த  2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் யுவராஜ்சிங்கின் அதிரடி ஆட்டம் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல பெரும் உதவிகரமாக இருந்தது. அந்த தொடரின்போது  நடைபெற்ற 9 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதம் உட்பட 362 ரன்களை குவித்து,15 விக்கெட்டுகளுடன் தொடர் நாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங்.

இந்நிலையில் நுரையீரல்  புற்றுநோய் காரணமாக சர்வதேச போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கேன்சர் இன்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார்.

அதையடுத்து தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு தனது விளையாட்டுத் திறனை நிரூபித்து முழு உடல்தகுதி யுடன் ஐபிஎல் போட்டியில் தற்போது விளையாடி வருகிறார்.

2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி-20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, ஸ்டுவர்ட் பிராடின் 6 பந்துக்களையும் 6 சிக்சராக விளாடி பரபரப்பையும் சாதனையையும் ஏற்படுத்தினார். இருந்தாலும் அவரை இந்திய அணி சரியாக பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தது.

கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். தொடர்ந்து தனது உடல் திறனை மெருகேற்றி வந்தார்.

இந்நிலையில், தனது ஓய்வு குறித்து  2019-ம் ஆண்டுக்கு பிறகே முடிவு எடுப்பேன் என யுவராஜ்சிங் கூறியுள்ளார். மேலும் கடந்த 2000மாவது ஆண்டு முதல் சர்வதேச விளையாட்டு போட்டிகளில்  கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், ஏறக்குறைய 17, 18 ஆண்டுகள் விளையாடி வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக யுவராஜ்சிங் விளையாடி வருகிறார்.

கடந்த 2015ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங் தற்போது ரூ.2 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.