தெலுங்கானா மாநிலத்தில் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமராவ், கட்சியின் செயல் தலைவராக இருப்பதோடு, மாநில அமைச்சராகவும் உள்ளார்.
இந்த நிலையில் சந்திரசேகர் ராவ் முதல்-அமைச்சர் பதவியை தனது மகனுக்கு விட்டுக்கொடுத்து விட்டு, தேசிய அரசியலில் ஈடுபடப்போவதாக தெலுங்கானா அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கூறி வந்தனர்.
ஆனால் இதனை சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற டி.ஆர்.எஸ். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் “நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். இன்னும் பத்து ஆண்டுகள் நான் தான் தெலுங்கானா முதல்வராக இருப்பேன்” என தெரிவித்தார்.
“நான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக, கட்சியினர் யாராவது சர்ச்சை கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்தால், அவர்களை கட்சியில் இருந்து தூக்கி எறிய தயங்க மாட்டேன்” என சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்தார்.
– பா. பாரதி