பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்- பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்- அவர் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார். அவரது உரையை கேட்க ஜனங்களும் திரள்கிறார் கள்.
பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘தன்னை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து நிலையில்-
அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று பேட்டி அளித்தார்.
‘’பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் தன்னை ஆதரிக்க வேண்டும்’ என்று பிரகாஷ்ராஜ் கூறி வருவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு குண்டுராவ்’’ சுயேச்சையாக பிரகாஷ்ராஜ் போட்டியிடுவதால் அவரை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. எனினும் பிரகாஷ்ராஜ் ,காங்கிரசில் சேர்ந்தால் – அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலனை செய்வோம்’’ என்றார்.
விஜயகாந்தை கூட்டணிக்குள் இழுக்க அவரது வீட்டுக்கே விசிட் அடித்து மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்-பேச்சு நடத்தியுள்ள நிலையில் – தென்னகத்தில் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜுக்கு –காங்கிரஸ் தூண்டில் போட்டிருப்பது அந்த மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோடியை வீழ்த்துவதை லட்சியமாக கொண்டுள்ள பிரகாஷ்ராஜ்-என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை.
—-பாப்பாங்குளம் பாரதி